இந்த அமைப்பு ஏறுமுகத்தின் முடிவில் ஏற்படும். இது ஒரே திசையாக சென்றுகொண்டுருக்கும் பங்கின் விலையை மாற்றப்போகிறது என்பதை நமக்கு அறிவுறுத்தும்.இந்த அமைப்பு மூன்று மேல்நிலை உச்சிகளை கொண்டது. இதில் நடு உச்சி மற்ற இரண்டு உச்சிகளை விட உயரமாக இருக்கும். மற்ற இரண்டு உச்சிகளும் கிட்டத்தட்ட ஒரே அளவாக இருக்கும். இது பார்பதற்கு தலை மற்றும் இரண்டு தோள்பட்டை போன்ற தோற்றம் கொண்டிருக்கும். இந்த மூன்று உச்சிகளின் கீழ்நிலைகள் தாங்கு நிலைகளாக செயல்படும்.
முதலாவது உச்சியை பங்கின் விலை அடைந்த பிறகு சிறது சரிவு ஏற்படும். இந்த சரிவு டிரண்டுலைனை உடைக்காமல் மேலே செல்லும். இப்பொழுது மேலே செல்கின்ற பங்கின் விலை புதிய உயரத்தை அடையும். பின்னர் அதிலிருந்து சரிவு ஏற்படும். இந்த சரிவு டிரண்டுலைனை உடைத்து விடும். இது அபாயத்தின் முதல் அறிகுறி.
இரண்டாவது சரிவில் இருந்து மேலே செல்லும் பங்கின் விலை இரண்டாவது உச்சியின் உயரத்தை உடைக்காமல் சிறிது கீழேயை தன்னுடைய புதிய உச்சியை உருவாக்கும். பொதுவாக இந்த உச்சி முதலாவது உச்சியின் உயரத்தை ஒட்டியே அமைந்திருக்கும்.
மூன்றாவது உச்சியில் இருந்து சரிந்து மூன்று உச்சியின் தாங்கு நிலையை உடைத்து விலை கீழே செல்லும். இங்கு வணிகத்தின் அளவு மிக முக்கியமான பங்கை ஆற்றுகின்றது. முதலாவது உச்சியை அடையும்பொழுது இருக்கும் வணிகத்தின் அளவை விட இரண்டாவது உச்சியை அடையும் பொழுது குறைவாக இருக்கும். இரண்டாவது உச்சியில் இருந்து குறையும்பொழுது அதிகமாக இருக்கும்.
தலை மற்றும் தோள்பட்டை அமைப்பு தாங்கு நிலையை உடைக்கும் பொழுதுதான் உறுதிசெய்யப்படுகின்றது. இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது வணிகத்தின் அளவு இங்கு அதிகமாக இருக்க வேண்டும்.
தாங்கு நிலை உடைபட்ட பிறகு, இதன் இலக்கு விலை என்பது தாங்கு நிலைக்கும் - இரண்டாவது உச்சிக்குமான வேறுபாடு ஆகும்.
மூன்று தாழ் நிலைகளையும் இணைத்து ஒரு கோடு வரையும்பொழுது (neck line) அந்த கோடு மேல் நோக்கி செல்லாமல் கீழ் நோக்கி செல்லுமாயின், பங்கின் விலை மிக அதிகமான சரிவை தரும்.
Wednesday, April 28, 2010
Subscribe to:
Post Comments (Atom)
முன்குறிப்பு
இத்தளம் பங்குசந்தையை பற்றி அறிந்து கொள்ளவும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எப்படி இயங்குகிறது என்பதை புரிந்துகொள்ள உதவும் வகையில் எழுதப்படுகிறது. இக்குறிப்புகள் அனைத்தும் தொழில்நுட்ப பகுப்பாய்வின் அடிப்படையில் மட்டுமே தரப்படுகின்றது. சந்தையின் நகர்வுகளுக்கு வேறு பல காரணங்களும் உண்டு. இத்தகவல்களை கொண்டு வணிகம் செய்யும்முன் சந்தையில் உள்ள அபாயங்கள் பற்றி தெரிந்துக்கொள்வது அவசியம். வணிகத்தில் உங்கள் சுயமுடிவோடு ஈடுப்படவும். இதில் ஏற்படும் லாப/நட்டத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல.
2 comments:
இன்றுதான் உங்கள் தளத்திற்கு வந்தேன்,
நல்ல தகவல்கள், தொடருங்கள், வாழ்த்துக்கள்.
நன்றி திரு.சைவகொத்துப்பரோட்டா
Post a Comment