Tuesday, June 8, 2010

நிஃப்டி?

பங்குசந்தையில் ஈடுபடும் மக்களின் தற்போதைய மிக முக்கியமான கேள்வி சந்தை எந்த திசையில் செல்லும். ஒரு நாள் 100 புள்ளிகள் சரிவு அடைகின்றது மறுநாள் 100 புள்ளிகள் ஏறுகின்றது. இதே தொடர்கதை ஆகிவிட்டது. கடந்த எட்டு மாதங்கள் சந்தை 4750 க்கும் 5300 க்கும் இடையில் கிட்டத்தட்ட 500 புள்ளிகளுக்கு இடையே வர்த்தகம் நடைபெற்றுள்ளது. ஒரே வருடத்தில் 90% மேலே ஏறிய சந்தை கிட்டத்தட்ட அதே கால அளவில் 15% க்கும் குறைவாக மேலே கிழே ஆட்டம் நடைபெற்று வருகின்றது.

வரைபடத்தை வைத்து கணிக்கும் பொழுது.



1. சந்தை oct -2009 ல் டிரெண்டு லைனை உடைத்துள்ளது.
2. மீண்டும் ஒருமுறை jan -2010 ல் டிரெண்டு லைனை உடைத்துள்ளது.
3. கிட்டத்தட்ட மூன்று மேல்நிலை தடைநிலைகளை உருவாக்கி உள்ளது.
4. இறங்கு முகத்திற்கான தடைநிலை மற்றும் தாங்குநிலைகளை கீழ்நேக்கியவாறு அமையப்பெற்றுள்ளது.
இவை அனைத்துமே தொழில்நுட்ப அடிப்படையில் சந்தைக்கு பாதகமான காரணிகள்.

செய்திகளின் அடிப்படையில் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி எப்பொழுது மிகப்பெரிய அளவில் வெடிக்கும் என்பது தெரியவில்லை இவை அனைத்துயும் வைத்து பார்க்கும் பொழுது கடந்த பாரளுமன்ற தேர்தலில் முடிவு வெளியான சமயத்தில் வரைபடத்தில் ஏற்பட்ட இடைவெளியை கூடிய சீக்கிரம் சரிசெய்ய வாய்ப்புள்ளது. அதாவது நிஃப்டி 3600 வரை இறங்க வாய்ப்பு உள்ளதாக நான் கருதுகிறேன். என்ன நடைபெற பொகின்றது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
---------------------------------------------------------------------------------------

Wednesday, April 28, 2010

தலை மற்றும் தோள்பட்டை அமைப்பு (மேல்நிலை)

இந்த அமைப்பு ஏறுமுகத்தின் முடிவில் ஏற்படும். இது ஒரே திசையாக சென்றுகொண்டுருக்கும் பங்கின் விலையை மாற்றப்போகிறது என்பதை நமக்கு அறிவுறுத்தும்.இந்த அமைப்பு மூன்று மேல்நிலை உச்சிகளை கொண்டது. இதில் நடு உச்சி மற்ற இரண்டு உச்சிகளை விட உயரமாக இருக்கும். மற்ற இரண்டு உச்சிகளும் கிட்டத்தட்ட ஒரே அளவாக இருக்கும். இது பார்பதற்கு தலை மற்றும் இரண்டு தோள்பட்டை போன்ற தோற்றம் கொண்டிருக்கும். இந்த மூன்று உச்சிகளின் கீழ்நிலைகள் தாங்கு நிலைகளாக செயல்படும்.

முதலாவது உச்சியை பங்கின் விலை அடைந்த பிறகு சிறது சரிவு ஏற்படும். இந்த சரிவு டிரண்டுலைனை உடைக்காமல் மேலே செல்லும். இப்பொழுது மேலே செல்கின்ற பங்கின் விலை புதிய உயரத்தை அடையும். பின்னர் அதிலிருந்து சரிவு ஏற்படும். இந்த சரிவு டிரண்டுலைனை உடைத்து விடும். இது அபாயத்தின் முதல் அறிகுறி.

இரண்டாவது சரிவில் இருந்து மேலே செல்லும் பங்கின் விலை இரண்டாவது உச்சியின் உயரத்தை உடைக்காமல் சிறிது கீழேயை தன்னுடைய புதிய உச்சியை உருவாக்கும். பொதுவாக இந்த உச்சி முதலாவது உச்சியின் உயரத்தை ஒட்டியே அமைந்திருக்கும்.

மூன்றாவது உச்சியில் இருந்து சரிந்து மூன்று உச்சியின் தாங்கு நிலையை உடைத்து விலை கீழே செல்லும். இங்கு வணிகத்தின் அளவு மிக முக்கியமான பங்கை ஆற்றுகின்றது. முதலாவது உச்சியை அடையும்பொழுது இருக்கும் வணிகத்தின் அளவை விட இரண்டாவது உச்சியை அடையும் பொழுது குறைவாக இருக்கும். இரண்டாவது உச்சியில் இருந்து குறையும்பொழுது அதிகமாக இருக்கும்.

தலை மற்றும் தோள்பட்டை அமைப்பு தாங்கு நிலையை உடைக்கும் பொழுதுதான் உறுதிசெய்யப்படுகின்றது. இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது வணிகத்தின் அளவு இங்கு அதிகமாக இருக்க வேண்டும்.

தாங்கு நிலை உடைபட்ட பிறகு, இதன் இலக்கு விலை என்பது தாங்கு நிலைக்கும் - இரண்டாவது உச்சிக்குமான வேறுபாடு ஆகும்.

மூன்று தாழ் நிலைகளையும் இணைத்து ஒரு கோடு வரையும்பொழுது (neck line) அந்த கோடு மேல் நோக்கி செல்லாமல் கீழ் நோக்கி செல்லுமாயின், பங்கின் விலை மிக அதிகமான சரிவை தரும்.

Thursday, April 22, 2010

இரண்டு தாழ்நிலைகள் (Double Bottom)

பொதுவாக மிக நீண்ட இறங்குமுகத்தின் முடிவில் ஏற்படுவது இந்த அமைப்பு ஆகும். இது இறங்குமுகம் ஏறுமுகமாக மாறுவதை நமக்கு அறிவுறுத்தும். முதலாவது தாழ்நிலையை அடையும் பொழுது எந்த வித மாற்றத்திற்கான அறிகுறிகள் நமக்கு தெரியாது. இது தான் இறங்குமுகத்தின் கடைசி நிலை என நமக்கு தெரியாது. முதலாவது தாழ்நிலையை அடைந்த பிறகு 10% முதல் 20% வரை விலை உயரும். வர்த்தகத்தின் அளவு ( volume) மிக குறைவாக இருக்கும். 10% உயர்வில் இருந்து சரிந்து முதலாவது தாழ்நிலையை அடையும் வரை வர்த்தகத்தின் அளவு மிக குறைவாக இருக்கும். இந்த இரண்டு தாழ்நிலைக்குமான காலஅளவு ஒன்று முதல் முன்று மாதம் இருக்கும். முதலாவது தாழ்நிலைக்கும், இரண்டாவது தாழ்நிலைக்கும் இடையே ஆன வேறுபாடு + (அ) - 3 சதவிதம் இருக்கலாம். இரண்டாவது தாழ்நிலையில் இருந்து உயரும் பொழுது அதிக அளவு வர்த்தகம் நடைபெறும். அல்லது கேப் ஏற்படும். இது தேவை அதிகரிப்பதை நமக்கு உணர்த்தும். மேலும் இரண்டு தாழ்நிலைக்குமான தடை நிலைகளை (Resistance) உடைத்து விலை மேலே போகும். அப்பொழுது தான் இறங்குமுகம், ஏறுமுகமாக மாறுவதை நாம் உறுதி செய்ய முடியும். இதில் அதிக அளவு வர்த்தகம் நடைபெற்றிருக்கும்.



இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை.

1) முதலாவது தாழ்நிலையில் இருந்து குறைந்தது 10% விலை உயர்வை அடைந்திருக்க வேண்டும்.
2) இரண்டு தாழ்நிலைக்குமான கால இடைவெளி குறைந்த்து ஒரு மாதம் இருக்க வேண்டும்.
3) தடை நிலைகளை (Resistance) உடைக்கும்பொழுது அதிக அளவில் வர்த்தகம் நடைபெற்றிருக்க வேண்டும். இது மிகவும் முக்கியம்.

இந்த அமைப்பில் அதாவது முதலாவது தாழ்நிலைக்கும் தடை நிலைக்கும் இடையிலான விலை வேறுபாடு தடை நிலையை உடைத்து பங்கின் விலை உயரும் பொழுது இலக்குவிலையாக நிர்ணயிக்கபடுகிறது.
---------------------------------------------------------------------------------------

டபுள் டாப் (double top)

பொதுவாக மிக நீண்ட ஏறுமுகத்தின் முடிவில் ஏற்படுவது இந்த அமைப்பு ஆகும். இது ஏறுமுகம் இறங்குமுகமாக மாறுவதை நமக்கு அறிவுறுத்தும். இந்த அமைப்பு பக்கத்து பக்கத்து இரண்டு மலைஉச்சியை போன்று அமைந்து இருக்கும். முதலாவது உச்சியை அடையும் பொழுது எந்த வித மாற்றத்திற்கான அறிகுறிகள் நமக்கு தெரியாது. இது தான் ஏறுமுகத்தின் கடைசி உயரம் என நமக்கு தெரியாது. முதலாவது உயரத்தை அடைந்த பிறகு 10% முதல் 20% வரை விலை குறையும். வர்த்தகத்தின் அளவு ( volume) மிக குறைவாக இருக்கும். 10% சரிவில் இருந்து மீண்டு முதலாவது உயரத்தை அடையும் வரை வர்த்தகத்தின் அளவு மிக குறைவாக இருக்கும். இந்த இரண்டு உயரங்களுக்குமான காலஅளவு ஒன்று முதல் முன்று மாதம் இருக்கும். முதலாவது உயரத்திற்கும், இரண்டாவது உயரத்திற்கும் இடையே ஆன வேறுபாடு + (அ) - 3 சதவிதம் இருக்கலாம். இரண்டாவது உயரத்தில் இருந்து குறையும் பொழுது அதிக அளவு வர்த்தகம் நடைபெறும். அல்லது கேப் ஏற்படும். இது தேவை குறைவதை நமக்கு காட்டுகிறது. மேலும் இரண்டு உயரத்திற்குமான தாங்கு நிலைகளை (support line) உடைக்கும். அப்பொழுது தான் ஏறுமுகம், இறங்குமுகமாக மாறுவதை நாம் உறுதி செய்ய முடியும். இதில் அதிக அளவு வர்த்தகம் நடைபெற்றிருக்கும்.



இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை.

1) முதலாவது உயரத்தில் இருந்து குறைந்து 10% விலை வீழ்ச்சியை அடைந்திருக்க வேண்டும்.
2) இரண்டு உயரத்திற்குமான கால இடைவெளி குறைந்த்து ஒரு மாதம் இருக்க வேண்டும்.
3) தாங்குநிலையை உடைக்கும்பொழுது அதிக அளவில் வர்த்தகம் நடைபெற்றிருக்க வேண்டும்.

இந்த அமைப்பில் அதாவது முதலாவது உச்சிக்கும் தாங்குநிலைக்கும் இடையிலான விலை வேறுபாடு தாங்குநிலையை உடைத்து பங்கின் விலை கீழ் இறங்கும் பொழுது இலக்குவிலையாக நிர்ணயிக்கபடுகிறது.

---------------------------------------------------------------------------------

Saturday, April 17, 2010

பல விதமான தொழில்நுட்பபகுப்பாய்வுகள்

நாம் டிரண்டுலைனை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இந்த டிரண்டுலைனை அடிப்படையாக கொண்டு 19 விதமான தொழில்நுட்ப்பகுப்பாய்வுகள் (Chart Patterns) உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு முக்கியமான விஷயம் சுத்தி சுத்தி எங்கே போனாலும் கடைசியில் டிரண்டுலைனில் தான் வந்து முடியும். நீண்ட கால மற்றும் குறுகிய கால வணிகத்திற்க்கு பயன் படுகின்றது. கிழே 19 விதமான தொழில்நுட்பபகுப்பாய்வுகளின் பெயர்கள் முறையே.

•Double Top
•Double Bottom
•Head and Shoulders Top
•Head and Shoulders Bottom
•Falling Wedge
•Rising Wedge
•Rounding Bottom
•Triple Top
•Triple Bottom
•Bump and Run Reversal
•Flag, Pennant
•Symmetrical Triangle
•Ascending Triangle
•Descending Triangle
•Rectangle
•Price Channel
•Measured Move - Bullish
•Measured Move - Bearish
•Cup with Handle

இவற்றை பற்றி விரிவாக வரும் பதிவுகளில் காணலாம்.
--------------------------------------------------------------------------------

Thursday, April 15, 2010

ICSA-India

பங்குகளை ஆராய்ந்து கொண்டு இருந்தபோழுது இந்த பங்கை பார்த்தேன். S-குருப் வகையை சேர்ந்த பங்கு. கடந்த ஜந்து வருடம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.

Mar-2005 Gross profit :21.51 cr
Mar-2009 Gross profit :235.94 cr

2008 வருடம் பெரிய நிறுவனங்கள் கூட தள்ளுடிய சமயம் இது அருமையாக செயல் பட்டு வந்து உள்ளது. இதன் தற்போதைய பிரைஸ் ஏர்னிங் ரேஷியோ வெறும் 3.80 மட்டுமே.



நீண்ட கால முதலீட்டுக்கு சிறந்த பங்காக எனக்கு தோன்றுகின்றது. பங்குசந்தை இறங்கும்பொழுது மிகக் குறைந்த அளவு பணம் முதலீடு செய்யலாம். இதில் இருக்கும் ஒரே பயம் ஆண்டுநிதிநிலை அறிகையின் நண்பகதன்மை. சத்யம் நிறுவனம் அந்த பயத்தை ஏற்படுத்தி சென்று விட்டது. பார்க்கலாம் வரும் காலத்தில் எப்படி செயல்படுகின்றது என்பதை.

Tuesday, April 6, 2010

என்ன செய்யலாம்?

என்னுடைய மின் அஞ்சலுக்கு ஒருசில கேள்விகள் கீழ்வரும்படி வருகின்றன. அவை X-பங்கை அதிக விலையில் அதிக அளவில் வாங்கி வைத்திள்ளேன் என்ன செய்யலாம்?

இதற்கு என்ன பதில் சொல்ல்லாம் என்று எனக்கு தெரியவில்லை. தொழில்நுட்ப அடிப்படையில் பதில் கூறலாம், உதாரணமாக X-பங்கு 500 யை தாண்டினால் ரூ 600, 700 செல்லாளாம். ஆனால் இந்த பதில் அவர்களுக்கு போதுமானதாக இருக்குமா என்றால் இல்லை அவர்களின் அடுத்த கேள்வி எப்பொழுது 500 யை தாண்டும் அதற்கு பதில் அந்த பங்கிற்கு தேவை (Demand) ஏற்படும் பொழுது. அவர்களின் அடுத்த கேள்வி எப்பொழுது தேவை ஏற்படும். என்னிடம் பதில் இல்லை.



என் தந்தையின் நண்பர் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வரும் சமயங்களில், பல சந்தர்ப்பங்களில் கிழ்வரும் சம்பவத்தை சொல்லி இருக்கிறார் அதாவது அவர் அண்ணாநகர் பகுதியில் ஒரு நிலம் வாங்க முடிவு செய்து பேசி பதிவு அலுவளகத்திற்கு சென்ற போது அந்த நிலத்தை விற்பவர் நிலத்தின் விலை உடன் ரூ 100 அதிகமாக கேட்க இவர் கோபித்துக்கொண்டு திரும்பி வந்துவிட்டார் என்று. அது எவ்வளவுபெரிய முட்டாள்தனம் என்று புலம்புவார் ஒருவேளை அவர் அதிக விலை கொடுத்து அந்த நிலத்தை வாங்கி இருப்பதாக எடுத்து கொண்டால் அப்பொழுது அது அதிகவிலை ஆனால் இப்பொழுது? இது பார்க்க (அ) கேட்க ஒரு சாதாரண சம்பவமாக தெரியலாம் ஆனால் இது போல பல மனிதர்களின் அனுபவம் நமக்கு சில பாடங்களை சொல்கின்றன. எதற்க்கு எப்பொழுது தேவை (Demand) ஏற்படும் என்று சாதாரண மனிதனால் கணிக்க முடியாது.

இப்பொழுது அதிக விலையில் வாங்கி வைத்திருப்பவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு பாடத்தை தரும். பங்கு சந்தைக்கு பதியதாக வருபவர்கள் அதிக விலையில் பங்குகளை வாங்கி மாட்டிக்கொள்வது ஒன்றும் புதியதல்ல. ஆனால் அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்.

பங்குசந்தையை பொருத்தவரை பணமோ, தொழில் நுட்பமோ முக்கியமல்ல தீர்க்கமான மனநிலைதான் முக்கியம். அதை அடைந்த மனிதர்களுக்கு வெற்றி நிச்சயம்.

முன்குறிப்பு

இத்தளம் பங்குசந்தையை பற்றி அறிந்து கொள்ளவும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எப்படி இயங்குகிறது என்பதை புரிந்துகொள்ள உதவும் வகையில் எழுதப்படுகிறது. இக்குறிப்புகள் அனைத்தும் தொழில்நுட்ப பகுப்பாய்வின் அடிப்படையில் மட்டுமே தரப்படுகின்றது. சந்தையின் நகர்வுகளுக்கு வேறு பல காரணங்களும் உண்டு. இத்தகவல்களை கொண்டு வணிகம் செய்யும்முன் சந்தையில் உள்ள அபாயங்கள் பற்றி தெரிந்துக்கொள்வது அவசியம். வணிகத்தில் உங்கள் சுயமுடிவோடு ஈடுப்படவும். இதில் ஏற்படும் லாப/நட்டத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல.