Friday, April 10, 2009

அறிமுகம்

இத்தளத்திற்கு வருகைத்தரும் அனைவருக்கும் நன்றி. முதலில் எங்களைப்பற்றி ஒரு அறிமுகம். நாங்கள் ஸ்ரீதர் மற்றும் இளங்கோ, கல்லூரி தோழர்கள். இருவரும் வெவ்வேறு துறைகளில் பணிபுரிந்து வந்தோம். நான் ஸ்ரீதர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலையை துவங்கி மாநில அதிகாரி பதவி வரை வளர்ந்துவிட்டேன். தமிழகம் முழுதுவம் பயணித்துவிட்டேன் ஆனால் உள்ளுக்குள் ஒரு சலிப்பு. எத்தனை நாட்களுக்கு தான் அடுத்தவங்களுக்கு ஆணி புடுங்கறது. மே முதல் நாள் தொழிலாளர் தினம். போதும் போங்கடா என்று வேலையை விட்டுவிட்டேன். மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை. நாங்கள் தோழ்ர்கள் அரட்டை அடிபதற்கென்று ஒரு நண்பனின் அறை உள்ளது. மறுநாள் அங்கு உள்ள கணிப்பொறியில் மேய்ந்துகொண்டுஇருந்தேன். அப்பொழுது அங்கு என் தோழன் இளங்கோ வந்தான். இளங்கோ ஒரு மென்பொருள் நிறுவனத்தில் graphic designer ஆக பணிபுரிந்து வந்தான்.
இளங்கோ: "என்னடா மாப்ள, வேலைக்கு போலியா"
ஸ்ரீதர்: "இல்லடா மச்சான் resign பண்ணிட்டேன் "
இளங்கோ: "என்னடா சொல்ற, ஏன் ???"
ஸ்ரீதர்: " ஆமாம் மச்சான், எவளோ நாள் தான் ஆணிய புடுங்கறது. சரி நீ என்ன இந்த பக்கம் "
இளங்கோ: " சேம் blood ... அடுத்தது என்ன மச்சான் செய்யப்போற "
ஸ்ரீதர்: " தெரியல பார்ப்போம்"

சுமார் இரண்டு மாதங்களாக இ-காமர்ஸ் மூலம் எதாவது வியாபாரம் செய்யலாம் என்று rediff மற்றும் e-bay போர்டல்களில் மேய்ந்து கொண்டிருந்தோம். ஆனால் எங்களை ஈர்த்தது என்னவோ rediff money-யில் இருந்த விவாத மேடை. தினமும் ஒரேமாதிரியான கேள்வியை பலர் கேட்டு கொண்டிருந்தனர் "I had bought ABC shares at price xxx. Now it had decreased so much. What to do? When will the stock reach my buy price".

அந்த விவாத மேடையில் 4-5 பேர் இது மாதிரியான கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்தனர். ஒரே விதமான கேள்விகளுக்கு பல விதமான பதில்கள். பதில் கூறும் ஒவ்வொரு நபருக்கு பின்னாலும் ரசிகர்கள் கூட்டம். யார் சொல்லுவது சரி என்று பலத்த விவாதம் (சண்டை).

அதுவரை பங்கு சந்தை என்றால் சூதாட்டம் என்று மட்டுமே நினைத்து கொண்டிருந்த எங்களுக்கு அதை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் வந்தது. அதிலும் குறிப்பாக ஒருவர் மீது அதீத நம்பிக்கை ஏற்பட்டது. காரணம் அவர் கூறும் கருத்துக்கள் மிக சரியாக பங்கு சந்தையில் எதிரொலித்தது. அப்படி என்றால் இது ஒன்றும் கண் கட்டி வித்தை இல்லையா ?

ஏன் தினசரி பங்குகளின் விலையில் ஏற்ற இறக்கங்கள்???

எதற்கு மக்கள் இதை ஒரு வித அச்சத்துடன் பார்கிறார்கள்???

எப்படி ஒரு சிலரால் சந்தையின் நகர்வுகளை சரியாக கணிக்க இயல்கிறது???

விடை தேடி பயணிக்க ஆரம்பித்தோம்......................................

முன்குறிப்பு

இத்தளம் பங்குசந்தையை பற்றி அறிந்து கொள்ளவும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எப்படி இயங்குகிறது என்பதை புரிந்துகொள்ள உதவும் வகையில் எழுதப்படுகிறது. இக்குறிப்புகள் அனைத்தும் தொழில்நுட்ப பகுப்பாய்வின் அடிப்படையில் மட்டுமே தரப்படுகின்றது. சந்தையின் நகர்வுகளுக்கு வேறு பல காரணங்களும் உண்டு. இத்தகவல்களை கொண்டு வணிகம் செய்யும்முன் சந்தையில் உள்ள அபாயங்கள் பற்றி தெரிந்துக்கொள்வது அவசியம். வணிகத்தில் உங்கள் சுயமுடிவோடு ஈடுப்படவும். இதில் ஏற்படும் லாப/நட்டத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல.