Thursday, April 22, 2010

இரண்டு தாழ்நிலைகள் (Double Bottom)

பொதுவாக மிக நீண்ட இறங்குமுகத்தின் முடிவில் ஏற்படுவது இந்த அமைப்பு ஆகும். இது இறங்குமுகம் ஏறுமுகமாக மாறுவதை நமக்கு அறிவுறுத்தும். முதலாவது தாழ்நிலையை அடையும் பொழுது எந்த வித மாற்றத்திற்கான அறிகுறிகள் நமக்கு தெரியாது. இது தான் இறங்குமுகத்தின் கடைசி நிலை என நமக்கு தெரியாது. முதலாவது தாழ்நிலையை அடைந்த பிறகு 10% முதல் 20% வரை விலை உயரும். வர்த்தகத்தின் அளவு ( volume) மிக குறைவாக இருக்கும். 10% உயர்வில் இருந்து சரிந்து முதலாவது தாழ்நிலையை அடையும் வரை வர்த்தகத்தின் அளவு மிக குறைவாக இருக்கும். இந்த இரண்டு தாழ்நிலைக்குமான காலஅளவு ஒன்று முதல் முன்று மாதம் இருக்கும். முதலாவது தாழ்நிலைக்கும், இரண்டாவது தாழ்நிலைக்கும் இடையே ஆன வேறுபாடு + (அ) - 3 சதவிதம் இருக்கலாம். இரண்டாவது தாழ்நிலையில் இருந்து உயரும் பொழுது அதிக அளவு வர்த்தகம் நடைபெறும். அல்லது கேப் ஏற்படும். இது தேவை அதிகரிப்பதை நமக்கு உணர்த்தும். மேலும் இரண்டு தாழ்நிலைக்குமான தடை நிலைகளை (Resistance) உடைத்து விலை மேலே போகும். அப்பொழுது தான் இறங்குமுகம், ஏறுமுகமாக மாறுவதை நாம் உறுதி செய்ய முடியும். இதில் அதிக அளவு வர்த்தகம் நடைபெற்றிருக்கும்.



இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை.

1) முதலாவது தாழ்நிலையில் இருந்து குறைந்தது 10% விலை உயர்வை அடைந்திருக்க வேண்டும்.
2) இரண்டு தாழ்நிலைக்குமான கால இடைவெளி குறைந்த்து ஒரு மாதம் இருக்க வேண்டும்.
3) தடை நிலைகளை (Resistance) உடைக்கும்பொழுது அதிக அளவில் வர்த்தகம் நடைபெற்றிருக்க வேண்டும். இது மிகவும் முக்கியம்.

இந்த அமைப்பில் அதாவது முதலாவது தாழ்நிலைக்கும் தடை நிலைக்கும் இடையிலான விலை வேறுபாடு தடை நிலையை உடைத்து பங்கின் விலை உயரும் பொழுது இலக்குவிலையாக நிர்ணயிக்கபடுகிறது.
---------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

முன்குறிப்பு

இத்தளம் பங்குசந்தையை பற்றி அறிந்து கொள்ளவும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எப்படி இயங்குகிறது என்பதை புரிந்துகொள்ள உதவும் வகையில் எழுதப்படுகிறது. இக்குறிப்புகள் அனைத்தும் தொழில்நுட்ப பகுப்பாய்வின் அடிப்படையில் மட்டுமே தரப்படுகின்றது. சந்தையின் நகர்வுகளுக்கு வேறு பல காரணங்களும் உண்டு. இத்தகவல்களை கொண்டு வணிகம் செய்யும்முன் சந்தையில் உள்ள அபாயங்கள் பற்றி தெரிந்துக்கொள்வது அவசியம். வணிகத்தில் உங்கள் சுயமுடிவோடு ஈடுப்படவும். இதில் ஏற்படும் லாப/நட்டத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல.