Thursday, March 25, 2010

பிரைஸ் ஏர்னிங் ரேஷியோ

நீண்ட கால வணிகத்திற்க்கு மிக சிறந்த ஒரு தொழில் நுட்பம் பிரைஸ் ஏர்னிங் ரேஷியோ (P/E ratio). இந்த பிரைஸ் ஏர்னிங் ரேஷியோ ஒரு பங்கை எப்பொழுது வாங்க, விற்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்தும். Value Investing யின் மிகவும் முக்கியமான ஒரு நுட்ப காரணியாக இந்த பிரைஸ் ஏர்னிங் ரேஷியோ விளங்குகிறது.

பிரைஸ் ஏர்னிங் ரேஷியோ?
ஒரு நிறுவனபங்கு அதன் ஆண்டு சம்பாத்தியத்தினைப் போல எத்தனை மடங்கு விலை விற்கிறது என்பதை குறிப்பது தான் பிரைஸ் ஏர்னிங் ரேஷியோ.

பிரைஸ் ஏர்னிங் ரேஷியோவை அடிப்படையாக கொண்டால், ஒரு பங்கின் பிரைஸ் ஏர்னிங் ரேஷியோ குறைவாக இருந்தால் அந்த பங்கை வாங்கவேண்டும். அதிகமாக இருந்தால் விற்க வேண்டும்.

வரலாறு நமக்கு சொல்லும் பாடம் நிஃப்டியினு பிரைஸ் ஏர்னிங் ரேஷியோ 13 யை தொடும்பொழுது பங்குகளை கொஞ்சம், கொஞ்சமாக வாங்க வேண்டும். ஒரு வேளை பிரைஸ் ஏர்னிங் ரேஷியோ 11யை உடைத்து கீழே சென்றால் கண்டிப்பாக வாங்க வேண்டிய சிறந்த தருணம் அது.

இதைப்போல் நிஃப்டியின் பிரைஸ் ஏர்னிங் ரேஷியோ 22 விட மேலே சென்றால் கையில் இருப்பதை கொஞ்சம், கொஞ்சமாக விற்க வேண்டும். பிரைஸ் ஏர்னிங் ரேஷியோ 25 யை உடைத்து மேலே சென்றால் கையில் இருப்பதை முழுவதுமாக விற்க வேண்டும்.

நிஃப்டியின் பிரைஸ் ஏர்னிங் ரேஷியோவை தெறிந்து கெள்ள வேண்டுமால் nseindia வலைதளத்தில் உள்ளது.

கிழே நிஃப்டியின் பிரைஸ் ஏர்னிங் ரேஷியோ வரலாற்று வரைபடம் உள்ளது. இது உங்களுக்கு மிக எளிதாக புரியும்.


-------------------------------------------------------------------------------------------

Wednesday, March 24, 2010

VIP Industries Ltd

நேற்று தொலைக்காட்சி பார்க்கும் போழுது VIP Industries Ltd பற்றி செய்தி ஓளிபரப்பானது. ஒரு வருடத்தில் கிட்டதட்ட 600% சதவிதம் உயர்வு. இது எப்படி சத்தியம்? இதில் பின்னால் இருக்கும் மர்மம் என்ன? காலம் தான் பதில் சொல்லவேண்டும்.



பொதுவாக இப்படி பட்ட பங்குகள் உயரும் வரை செய்திகள் வெளியே வருவதே இல்லை. இப்பொழுது ஏன் வெளிவருகின்றது? இப்பொழுது தான் இதன் பின்னால் இருக்கும் நபர்கள் இப்படி பட்ட பங்கினை பற்றி செய்தியை வெளியே பரப்பி விடுகின்றார்கள். சராசரி வணிகன் இந்த உயர்வை நம்பி இன்னும் மேலே செல்லும் என எண்ணி இந்த வலையில் விழுந்து விடுகிறார்கள். இப்படிபட்ட பங்கின் விலை உயர்வு உண்மையான ஏற்றம் தானா? தற்பொழுது விலை அந்த பங்கிற்கு ஏற்ற விலையா? என்பதை பார்ப்பதே இல்லை? விளைவு நட்டம்.

உலகில் அனைத்து இடங்களிலும் நம்மை ஏமாற்ற சிலர் காத்துகொண்டு இருக்கிறார்கள் நாம் தான் நம்மை காத்துக்கொள்ளவேண்டும்.

---------------------------------------------------------------------------------------

Saturday, March 20, 2010

ரெபோ ரேட்- ரிவெர்ஸ் ரெபோ ரேட்

நேற்று ரிசர்வ் வங்கி வட்டி விகிததில் சில மறுதல் செய்து உள்ளது. அவை ரெபோ ரேட் மற்றும் ரிவெர்ஸ் ரெபோ ரேட் யில் முறையே 25 basis points ஏற்றி உள்ளது. சரி ரெபோ ரேட், ரிவெர்ஸ் ரெபோ ரேட் விளக்கம் கீழே.

ரெபோ ரேட் - ரிசர்வ் வங்கி மற்ற வங்கிக்கு கடன் கொடுக்கும் வட்டி விகிதம்.

ரிவெர்ஸ் ரெபோ ரேட் - வங்கிகள் ரிசர்வ் வங்கியில் பணம் சேமித்து வைக்க ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு கொடுக்கும் வட்டி விகிதம்.

இந்த செய்தி எப்படி பங்குசந்தையை பதிக்கும் என்பதை திங்கள் அன்று தெரியும்.

கீழே நிஃப்டி வரைபடம் உள்ளது அதில் தடைநிலை 5310 மற்றும் தாங்குநிலை 5050 ஆகும்.

நிஃப்டி தற்போழுது தடைநிலை அருகே உள்ளது.



தடைநிலை மற்றும் தாங்குநிலை பற்றி அறிய பழைய பதிவை படிக்கவும்.

http://kaalaivanigam.blogspot.com/2009/11/blog-post_27.html
----------------------------------------------------------------------------------------------

Friday, March 12, 2010

தினசரி வணிகம்

பங்குசந்தைக்கு புதியதாக வருபவர்கள் மிக அதிகமாக கேட்கும் கேள்விகளில் ஒன்று தினசரி வணிகத்திற்கான பரிந்துரைகள்.

பங்குசந்தையை பற்றி புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம் அதிலும் மிகமிக கடினமான ஒன்று தினசரிவணிகம். ஆனால் ஏன் அதிகமான மக்கள் தினசரி வணிகத்தின் மீது அளவுக்கு அதிகமாக ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்?



மக்கள் எளிதாக தினமும் கையில் காசுபார்க்க ஆசைபடுகிறார்கள். அது 100 (அ) 50 ரூ யோ அதை பற்றி கவலைப்படுவதில்லை. தினசரி வணிகத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பதை கணிக்கும் ஆவல் அந்த கணிப்பு சரியா, தவறா என்ற முடிவு அன்றே தெரிந்து விடுகிறது. அவர்களுடைய கணிப்பு சரி என்றால் அதில் கிடைக்கும் பூரிப்பு அதிகம். தவறு என்றால் சோகம், கோபம் அதிகம். இன்றைய தோல்வி நாளைய வெற்றியாக மாற்றத்துடிக்கிறார்கள் அது மட்டுமல்ல கையில் ஒரு லட்சம் ரூபாயை வைத்து கொண்டு பல லட்சம் மதிப்புள்ள பங்குகளை வாங்க முடிகிறது, லாபம் வந்தால் மிக அதிகம் நட்டமும் மிக அதிகம். ஆனால் பாவம் சராசரி தினசரி வணிகரின் மனநிலை குறைந்த லாபத்தை உடனே உறுதிசெய்து விடுவான். ஆனால் குறைந்த நட்டத்தை ஏற்க மனமில்லாமல் காத்திருப்பான் அவன் கைகாசு கரையும் வரை.

அனைத்து நாட்களும் பங்குசந்தையில் நிச்சயதன்மை அற்ற நாட்களாகும். என்றோ ஒரு நாள் அவனை மிக அதிக கஷ்டத்தில் (நஷ்டத்தில்) ஆழ்த்தி விடுகிறது. பிறகு அவன் சந்தையை எட்டி கூட பார்ப்பதில்லை. நிதானமான பயணம் என்றும் வெற்றியை தரும்.


-------------------------------------------------------------------------------------------

Wednesday, March 10, 2010

டிரெண்டு லைன்-3

கடந்த 2008-ம் வருடம் பங்குசந்தையில் ஏற்பட்ட மிகபெரிய வீழ்ச்சியின் பொழுது டிரெண்டு லைன் நமக்கு Exit signal தந்ததா? வரைபடம் கிழே.


-----------------------------------------------------------------------------------------

Monday, March 8, 2010

டிரெண்டு லைன்-2

பங்குசந்தை இந்த அளவுக்கு மேலே போகுமென்று தெரியாது. தெரிஞ்சிருந்தா காசு போட்டு இருப்பேன் என்று வருத்தப்படுகிறிர்களா?

டிரெண்டு லைன் (Trendline) பற்றி தெரிந்திருந்தால் இப்படி வருத்தப்பட மாட்டீர்கள். கிழே படத்தை பாருங்கள்.



01.04.2009 அன்று நீங்கள் நிஃப்டியில் முதலீடு செய்திருந்தால் மூன்றே மாதங்களில் 4750 வரை சென்றது. சுமார் 58% லாபம் அடைந்திருப்பீர்.
அதே குறிப்பிட்ட காலத்தில் பல பங்குகள் டிரெண்டு லைன்-ஐ உடைத்து விலைகள் இரண்டு மடங்காக உயர்ந்தது.

பல தொழில்நுட்ப ஆய்வுகள் இதே போல் Entry மற்றும் Exit signal -கள் கொடுக்கும். ஆனால் நீண்ட மற்றும் மிகநீண்ட கால முதலீட்டிற்கு டிரெண்டு லைன் தான் மிகவும் சிறந்த signal ஆகும்.

கடந்த 2008-ம் வருடம் பங்குசந்தையில் ஏற்பட்ட மிகபெரிய வீழ்ச்சியின் பொழுது டிரெண்டு லைன் நமக்கு Exit signal தந்ததா? வரைபடம் நாளை.

------------------------------------------------------------------------------------------ ------

Saturday, March 6, 2010

டிரெண்டு லைன் -1

பங்குசந்தையின் நகர்வுகள் பகுதியில் நாம் பார்த்த இறங்குமுகத்தில் ஒரு நிறுவனபங்கின் விலை இறங்குமுகத்தில் வரைபடம் எப்படி இருக்கும் எனில் முதல் தடைநிலையை விட இரண்டாவது தடைநிலை கிழே இருக்க வேண்டும். இரண்டாவது விட முன்றாவது கிழே இருக்கவேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்ட தடைநிலையை இணைக்கும் ஒரு சாய்கோடு வரைந்தால் அந்த சாய்கோட்டை எப்போழுது அந்த பங்கின்விலை உடைத்து மேல் ஏறுகின்றதோ அங்கே அந்த பங்கை வாங்கவேண்டும்.
இதை விளக்கும் படம் கிழே.

இதை போல் ஒரு பங்கியின் விலை ஏறுமுகம் எப்படி இருக்கும் எனில் முதல் தாங்குநிலையை விட இரண்டாவது தாங்குநிலை மேலே இருக்கும்.
முன்றாவது இரண்டாவதை விட மேலே இருக்கும்.
தாங்குநிலைகளை இணைக்கும் விதமாக ஒரு கோடு வரைய வேண்டும் அந்த கோட்டை என்று பங்கின் விலை உடைக்கின்றதோ அன்று அந்த பங்கை விற்க வேண்டும் வரைபடம் கிழே.


----------------------------------------------------------------------------------

Monday, March 1, 2010

வண்ணத்திருவிழா



உடைகள் மட்டும் அல்ல உள்ளங்களும் வண்ணமயம் ஆகட்டும்.

Happy Holi
-காளை(லை) வணிகம்.

முன்குறிப்பு

இத்தளம் பங்குசந்தையை பற்றி அறிந்து கொள்ளவும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எப்படி இயங்குகிறது என்பதை புரிந்துகொள்ள உதவும் வகையில் எழுதப்படுகிறது. இக்குறிப்புகள் அனைத்தும் தொழில்நுட்ப பகுப்பாய்வின் அடிப்படையில் மட்டுமே தரப்படுகின்றது. சந்தையின் நகர்வுகளுக்கு வேறு பல காரணங்களும் உண்டு. இத்தகவல்களை கொண்டு வணிகம் செய்யும்முன் சந்தையில் உள்ள அபாயங்கள் பற்றி தெரிந்துக்கொள்வது அவசியம். வணிகத்தில் உங்கள் சுயமுடிவோடு ஈடுப்படவும். இதில் ஏற்படும் லாப/நட்டத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல.