Saturday, December 26, 2009

வர்த்தக ஆலோசனை-26-12-2009

பங்கு பரிந்துரை பெயர் - NTPC(NSE)

கால அளவு - 3 மாதம்

வாங்க வேண்டிய விலை - ரூ 220-230

முதல் இலக்கு விலை - ரூ 255-260

இரண்டாம் இலக்கு விலை - ரூ 280

நீண்ட காலத்திற்க்கு ஏற்ற பங்கு.

நீங்கள் பங்குசந்தைக்கு ஒதுக்கிய பணத்தில் 5% மட்டும் இந்த பங்கை வாங்க வேண்டும்.

Tuesday, December 22, 2009

ஓ இது தான் "அ" வா?

இந்த பதிவுதான் முதல் பதிவாக இருந்திருக்க வேண்டும். இதை ஞாபகப்படுத்திய திரு.தேவன் அவர்களுக்கு நன்றி. பங்குவணிகம் செய்ய ஒருவருக்கு என்ன என்ன தேவைகள்? முதலில் ஏதவாது ஒரு வங்கியின் சேமிப்பு கணக்கு மற்றும் வருமானவரித்துறையின் கீழ் வரும் பேன்கார்டு(PAN Card) அவசியம். முதலில் இதை வாங்கிக் கொள்ள வேண்டும். டிமேட்(Demat) கணக்கு திறக்க இது மிகவும் அவசியம். அடுத்த தேவைகள் தங்களின் வீட்டு முகவரிக்கான சான்று, இரண்டு புகைப்படம் பாஸ்போர்ட் அளவில் மற்றும் ரத்துசெய்த காசோலை ( Cancelled cheque). இவை அனைத்தும் தயார் எனில் பங்குதரகு நிறுவனத்தை அணுகலாம். உதாரணமாக
Sharekhan
Indiabulls Securities
Indiainfoline
Geojit
ICICI Direct
Reliance Money
Religare
and many others
அவர்கள் தரும் விண்ணப்பத்தை கவனமாக படித்து பூர்த்திசெய்து, மேலே குறிப்பிட்ட சான்றுகளுடன் அளித்தால் 10 நாட்களில் தங்களுக்கு டிமேட் கணக்கு (Demat Account) மற்றும் வர்த்தக கணக்கு (Trading Account) துவங்கி தருவார்கள்.

வங்கி கணக்கு, வர்த்தக கணக்கு, டிமேட் கணக்கு (Three in one Account) செயல்படும் விதம்:

வங்கி கணக்கு
இது சாதாரண வங்கி சேவை கணக்காகும். நீங்கள் இணையதளம் மூலம் நேரடி வணிகம் (Online Trading) செய்ய விரும்பினால், உங்கள் பங்கு வணிக தரகு நிறுவனம் அவர்கள் தொடர்பு வைத்துள்ள வங்கிக் கிளையில் உங்களுக்கு ஒரு சேவை கணக்கை பூஜ்ய முதலீட்டில் துவங்கி கொடுப்பார்கள். இதை உங்கள் வர்த்தக கணக்குடன் இணைத்து இருப்பார்கள். இந்த வங்கி சேமிப்பு கணக்கின் முலமாகதான் வர்த்தக கணக்கில் பணத்தை செலுத்த முடியும்.

வர்த்தக கணக்கு
இது பங்கு தரகு நிறுவனத்தில் தொடங்கப்படும் ஒரு கணக்கு ஆகும். இந்த கணக்கில் பணம் இருந்தால் தான் நீங்கள் பங்குகளை வாங்க முடியும்.அதைபோல் வாங்கிய பங்கை விற்றாலும் பணம் இந்த கணக்கில் தான் வரவு வைக்க படும். உங்களுக்கு பணம் தேவை எனில் இங்கு இருந்து தங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றி கொள்ளலாம்.

டிமேட் கணக்கு
இந்த கணக்கு உங்கள் பங்குதரகு நிறுவனம் தங்கள் பெயரில் NSDL-யில் (National Securities Depository Limited) துவங்கும். உங்கள் பணத்தை வங்கி கணக்கில் சேமித்து வைப்பது போன்று நீங்கள் வாங்கும் பங்குகள் இந்த டிமேட் கணக்கில் சேமிக்க படும். பொதுவாக நீங்கள் பங்கு வாங்கிய 3 வது தினம் உங்கள் கணக்கிற்கு வந்து சேறும்.

மேலும் எளிதாக புரிந்து கொள்ள கீழே உள்ள படத்தை பாருங்கள்.


(முன்பு பங்கு பத்திரங்களை வாங்கி வைத்திருப்பவர்கள் இப்பொழுது விற்க வேண்டுமானால் முதலில் டிமேட் கணக்கை துவங்கி பத்திரங்களை டிமேட்டாக (Dematerialise) மாற்ற வேண்டும்.)
--------------------------------------------------------------------------------

Thursday, December 10, 2009

வர்த்தக ஆலோசனை-10-12-2009

பங்கு பரிந்துரை பெயர் - Blue Dart(NSE)

கால அளவு - 3 மாதம்

வங்க வேண்டிய விலை - ரூ 602

முதல் இலக்கு விலை - ரூ 670
இரண்டாம் இலக்கு விலை - ரூ 730

தாங்கு நிலை - 575

சந்தை திசையற்ற ஒரு நிலையில் இருப்பதால் எதிர்பாராத திருப்பங்களுக்கு நிறையவே வாய்ப்பிருப்பதால் கவனத்துடன் செயல்படுதல் அவசியம். (Only for Risk Traders).
----------------------------------------------------

Friday, December 4, 2009

விஜயின் புலி உறுமுது படக்கோப்பு முதல் முறையாக

Monday, November 30, 2009

தடைநிலை மற்றும் தாங்கு நிலை

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சம்பவம் நவம்பர் 2008 பருவமழை நல்ல மழையை பொழிந்ததை ஒட்டி விவசாயிகள் நெல் விதைத்து 2009 ஜனவரி மாதம் நெல் அறுவடை செய்கின்றார்கள். அனைத்து விவசாயிகளும் ஒரே நேரத்தில் அறுவடை செய்வதால் நெல் கொள்முதல் சந்தையில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்முட்டையின் விலை மிகக் குறைந்த விலை ரூ 500 க்கு விற்கப்படுகிறது.பிப்ரவரி மாதம் நெல்முட்டை வரத்து சற்று குறைந்தது.எனவே நெல் கொள்முதல்விலை சிறிது அதிகரித்து ரூ 600 க்கு விற்கப்படுகிறது மார்ச் மாதம் நெல்வரத்து மிகவும் குறைந்த்து. எனவே நெல் கொள்முதல் விலை ரூ 700 என்ற உச்சத்தை தொடுகிறது.

இதே போல் ஜனவரியில் நெல் விதைத்து ஏப்ரலில் நெல் அறுவடை நடக்கிறது,விளைவு ஏப்ரல் மாதம் நெல்கொள்முதல் நிலையங்களில் நெல்வரத்து மிக அதிகம் எனவே ரூ 700 ல் இருந்த கொள்முதல்விலை சில நாட்களிலே சரிந்து ரூ 500 ரை தொட்டது.பின்னர் மே மாதம் நெல்வரத்து சற்று குறைந்தது. எனவே விலை ரூ 600 தொட்டது. ஜுன் மாதம் நெல்வரத்து மிகவும் குறைந்தது எனவே நெல்கொள்முதல் விலை ரூ 700 தொட்டது.இதை கொண்டு ஒரு வரைபடம் கீழே வரையப்பட்டுள்ளது.



நெல்கொள்முதல் சந்தையில் நெல் வாங்கி அதை வெளிமாநிலத்திற்கு விற்கும் வியாபாரி மற்றும் அரிசியை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வும் மிகப்பெரிய முதலாளிகள் எங்கு வாங்குவார்கள், சந்தேகம் ஏன் கண்டிப்பாக ரூ 500ல் தான், எனவே நெல்விலை ரூ 500 க்கு அருகில் வரும் போது நெல்கொள்முதல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் மிக அதிக அளவில் பணம் சந்தைக்குள்வரும். அதாவது ரூ 500ல் ஒரு டிமாண்டு உருவாகும். எனவே நெல் கொள்முதல் விலை ரூ 500 ல் இருந்து தானாகவே ரூ 600 நோக்கி மேலே செல்லும். ஏப்ரல் மாதம் ரூ 700 ல் இருந்த கொள்முதல் விலை மேல் இருந்து கீழே இறங்கும் பொழுது ரூ500 ல் ஒரு தாங்குநிலை உருவாகின்றது. இதற்க்கு சப்போர்ட்(Support) எனப்படும்.

இதை போல் நெல்கொள்முதல் விலை ரூ 700 யை தொடும் பொழுது அடுத்த மாதம் விலை ரூ 500க்கு செல்லும் எனும் பயத்தில் அதிக அளவில் விற்க வருவார்கள் அங்கே ஒரு விலை ஏற்றத்தில் ஒரு தடைநிலை உருவாகும். இதற்க்கு ரெசிஸ்டென்ஸ்(Resistance) என்று பெயர்.

இது பங்குச்சந்தைக்கும் பொருந்தும். ஒரு குறிப்பிட்ட நிறுவனப்பங்கின்விலை ஒரு குறிப்பிட்ட விலையில் ஏதே ஒரு காரணத்திற்காக அதிகமானவர்கள் அதாவது, பரஸ்பரநிதி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலிட்டாளர்கள், இந்திய மிகப்பெரிய பணக்காரர்கள் வாங்குவார்கள் அந்த பங்கிற்கு ஒரு டிமாண்டு அதாவது பங்குவிலை வீழ்ச்சியின் ஒரு தாங்குநிலை உருவாகும். இதே போல் ஒரு குறிப்பிட்ட விலையில் அதிகமானவர்கள் விற்பார்கள் அது பங்கின் விலைஏற்றத்தில் ஒரு தடைநிலையை உருவாக்கும்.இது தான் பங்குச்சந்தையில் பயன்படுத்தப்படும் சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டென்ஸ் ஆகும்.

கிழே நிஃப்டி வரைபடம் உள்ளது. அதில் தடைநிலை மற்றும் தாங்குநிலை கொடுக்கப்பட்டுள்ளது.நன்கு கவனித்தால் நிஃப்டி தடைநிலை அருகே வரும் பொழுது துபாய் கடன் பத்தின செய்தி வந்து சந்தை கிழே இறங்கியது .


---------------

Monday, November 23, 2009

பங்குசந்தையில் தொழில்நுட்ப பகுப்பாய்வு

ஒரு நிறுவனப்பங்கின் கடந்த கால விலை ஏற்ற,இறக்கங்களை கொண்டு வரைபடம் வரைந்து,அதிலிருந்து எதிர்வரும் காலத்தில் அந்த பங்கின் விலை ஏற்ற இறக்கம் எவ்வாறு இருக்கலாம் என கணிக்கும் முறைக்கு தொழில்நுட்ப பகுப்பாய்வு எனப்படும்.

இங்கு பயன்படுத்தப்படும் வரைபடம் எப்படி இருக்குமென்றால் நாம் பள்ளி பாடத்தில் பயன்படுத்தும் வரைபடம் போன்றது.இந்த வரைபடத்தில் X அச்சில் கால அளவை குறிக்கும், Y அச்சு விலை அளவை குறிக்கும்.

குறிப்பாக மூன்று விதமான வரைபடங்கள் பங்குசந்தையில் பயன்படுத்தப்படுகின்றன.அவை

லைன் சார்ட்

லைன் சார்ட் அந்த நிமிட (அ) அன்றைய தினம் விலை முடிவை கொண்டு வரையப்படுகின்றது.

பார் சார்ட்
பார் சார்ட் -1(Bars)


பார் சார்ட் -2 (Bars W/open)


பார் சார்ட் அன்றைய தினத்தின் தொடக்க,முடிவு,அன்றையதினத்தின் அதிகபட்ச விலை மற்றும் குறைந்தபட்ச விலை உள்ளடக்கியது.

கேன்டில் ஸ்டிக் சார்ட்

கேன்டில் ஸ்டிக் சார்ட் மற்றும் பார் சார்ட் இடையே உள்ள வேறுபாடு படங்களை கண்டு நிங்களே அறிந்து கொள்ளுங்கள்.
கேன்டில் ஸ்டிக் சார்ட் என்பது 300 வருட பழமையான, ஜப்பானியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு முறையாகும்.இதை சமீப காலமாக, அதிகமான வர்த்தகர்கள் பயன்படுத்துகிறார்கள்.

இதே போன்று வரைபடத்தில் X- அச்சில் உள்ள கால அளவு தனிப்பட்ட வர்த்தகர்களின் தேவைக்கேற்ப மாறுபடுகிறது. குறிப்பாக தினசரி வர்த்தகத்திற்கு 1,5,15,30 நிமிட கால அளவை கொண்ட வரைபடங்களை பயன்படுத்தலாம்.கிழே 1 நிமிட வரைபடம் கொடுக்கப்பட்டுள்ளது.இது 17.11.2009 அன்று காலை 9.30 முதல் மாலை 3.30 வரையிலான 1 நிமிட நிப்டி வரைபடமாகும்.

குறுகிய கால மற்றும் நிண்ட கால முதலீட்டாளர்கள் தினசரி,ஒரு வாரம், ஒரு மாதம் காலஅளவை கொண்ட வரைபடம் பயன்படுத்தலாம்.
இத்தகைய வரைபடங்களை பங்குவணிகதரகு நிறுவனங்கள் அவர்களுடைய வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக தருகின்றன.

Thursday, November 12, 2009

என்னடா நடக்குது இங்கே?

பங்கு சந்தையை பற்றிய பொதுவான கருத்து சூதாட்டம். பணம்படைத்தவன் என்ன நினைக்கிறானோ அதுபடி சந்தை ஏறவும், இறங்கவும் செய்கிறது. ஒரு வகையில் இது சரியே. மேனுபுலேசன் இங்கு இருக்கத்தான் செய்கிறது. அது மட்டும் இன்றி பங்கு சந்தை மனதுடன் சம்பந்தப்பட்டது. எ.கா. ஒரு பங்கை 10ரூ க்கு வாங்கி அதை 12 ரூபாய்க்கு விற்றால் அது 16 ரூ வரை செல்லும். அடுத்த முறை 10ரூபாய்க்கு வாங்கி 16 வரை இலக்கு நிர்ணயித்து இருந்தோம் ஆனால் அது 12 வரை சென்று கீழே 6 ரூபாய்க்கு போகும் நாமும் பயந்து போய் 6 ரூபாய்க்கு விற்போம் விற்ற பிறகு அது 16 ரூபாய் வரை சென்று நம்மை பார்த்து சிரிக்கும். இங்கு ஆசை பயம் என இரண்டும் மனதுடன் சம்பந்தப்பட்டது. இது மட்டும் அல்ல ஒரே செய்திக்கு சந்தை இரண்டு விதமாக செயல்பாடும். எ.கா. வட்டி வீதம் குறைப்பு, இதற்கு ஒரு சமயம் இறங்கும். அதே வட்டி வீதம் குறைப்புக்கு சந்தை ஒரு சமயம் ஏறும். ஏன் என்று ஒன்றுமே புரியாது. அதே போல் பெட்ரோல் விலை அதிகரிப்பு என்பது ஒரு செய்தி. இதற்கு ஒரு நிறுவனத்தின் பங்கு ஏறும் அதே தொழில் உள்ள மற்றொரு நிறுவனத்தின் பங்கு இறங்கும் ஏன்? தெரியாது.
எல்லாம் மேனுபுலேசன் தான். பங்குசந்தையில் மேனுபுலேசன் இல்லை எனில் சந்தை இயங்காது. லாபமும் நட்டமும் இரண்டும் பார்க்க இயலாது. இந்த மேனுபுலேசனுக்கு என்று ஒரு சில கணக்கு இருக்கின்றது. அதாவது தொழில்நுட்பம். சும்மா ஒரு பணக்காரன் ஒரு பங்கை ஏற்ற நினைத்து அதை வாங்கினால் அதே பங்கை வேறு இரண்டு பணக்கார்கள் இறக்க நினைத்து,விற்று அந்த பணக்காரனை இவர்கள் ஏழை ஆக்கிவிட்டு சென்றுவிடுவார்கள். அதனால் தான் ஒரு சில தொழில்நுட்பங்கள் இந்த வர்த்தகத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது இதில் ஈடுபடும் ஒட்டுமொத்த வணிகர்களின் மனநிலையை புரிந்து கொள்ள உருவாக்கப்பட்டது தான் தொழில்நுட்ப்பகுப்பாகும். மேலே சொன்ன ஒரு செய்தி இருவித செயல்பாடுகளுக்கு தொழில்நுட்ப்பகுப்பாய்வே காரணம் ஆகும். தொழில்நுட்ப்பகுப்பாய்வை சரியாக பயன்படுத்தினால் சிறுவணிகர்கள் கூட லாபம் பார்க்க முடியும்.

Friday, April 10, 2009

அறிமுகம்

இத்தளத்திற்கு வருகைத்தரும் அனைவருக்கும் நன்றி. முதலில் எங்களைப்பற்றி ஒரு அறிமுகம். நாங்கள் ஸ்ரீதர் மற்றும் இளங்கோ, கல்லூரி தோழர்கள். இருவரும் வெவ்வேறு துறைகளில் பணிபுரிந்து வந்தோம். நான் ஸ்ரீதர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலையை துவங்கி மாநில அதிகாரி பதவி வரை வளர்ந்துவிட்டேன். தமிழகம் முழுதுவம் பயணித்துவிட்டேன் ஆனால் உள்ளுக்குள் ஒரு சலிப்பு. எத்தனை நாட்களுக்கு தான் அடுத்தவங்களுக்கு ஆணி புடுங்கறது. மே முதல் நாள் தொழிலாளர் தினம். போதும் போங்கடா என்று வேலையை விட்டுவிட்டேன். மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை. நாங்கள் தோழ்ர்கள் அரட்டை அடிபதற்கென்று ஒரு நண்பனின் அறை உள்ளது. மறுநாள் அங்கு உள்ள கணிப்பொறியில் மேய்ந்துகொண்டுஇருந்தேன். அப்பொழுது அங்கு என் தோழன் இளங்கோ வந்தான். இளங்கோ ஒரு மென்பொருள் நிறுவனத்தில் graphic designer ஆக பணிபுரிந்து வந்தான்.
இளங்கோ: "என்னடா மாப்ள, வேலைக்கு போலியா"
ஸ்ரீதர்: "இல்லடா மச்சான் resign பண்ணிட்டேன் "
இளங்கோ: "என்னடா சொல்ற, ஏன் ???"
ஸ்ரீதர்: " ஆமாம் மச்சான், எவளோ நாள் தான் ஆணிய புடுங்கறது. சரி நீ என்ன இந்த பக்கம் "
இளங்கோ: " சேம் blood ... அடுத்தது என்ன மச்சான் செய்யப்போற "
ஸ்ரீதர்: " தெரியல பார்ப்போம்"

சுமார் இரண்டு மாதங்களாக இ-காமர்ஸ் மூலம் எதாவது வியாபாரம் செய்யலாம் என்று rediff மற்றும் e-bay போர்டல்களில் மேய்ந்து கொண்டிருந்தோம். ஆனால் எங்களை ஈர்த்தது என்னவோ rediff money-யில் இருந்த விவாத மேடை. தினமும் ஒரேமாதிரியான கேள்வியை பலர் கேட்டு கொண்டிருந்தனர் "I had bought ABC shares at price xxx. Now it had decreased so much. What to do? When will the stock reach my buy price".

அந்த விவாத மேடையில் 4-5 பேர் இது மாதிரியான கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்தனர். ஒரே விதமான கேள்விகளுக்கு பல விதமான பதில்கள். பதில் கூறும் ஒவ்வொரு நபருக்கு பின்னாலும் ரசிகர்கள் கூட்டம். யார் சொல்லுவது சரி என்று பலத்த விவாதம் (சண்டை).

அதுவரை பங்கு சந்தை என்றால் சூதாட்டம் என்று மட்டுமே நினைத்து கொண்டிருந்த எங்களுக்கு அதை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் வந்தது. அதிலும் குறிப்பாக ஒருவர் மீது அதீத நம்பிக்கை ஏற்பட்டது. காரணம் அவர் கூறும் கருத்துக்கள் மிக சரியாக பங்கு சந்தையில் எதிரொலித்தது. அப்படி என்றால் இது ஒன்றும் கண் கட்டி வித்தை இல்லையா ?

ஏன் தினசரி பங்குகளின் விலையில் ஏற்ற இறக்கங்கள்???

எதற்கு மக்கள் இதை ஒரு வித அச்சத்துடன் பார்கிறார்கள்???

எப்படி ஒரு சிலரால் சந்தையின் நகர்வுகளை சரியாக கணிக்க இயல்கிறது???

விடை தேடி பயணிக்க ஆரம்பித்தோம்......................................

முன்குறிப்பு

இத்தளம் பங்குசந்தையை பற்றி அறிந்து கொள்ளவும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எப்படி இயங்குகிறது என்பதை புரிந்துகொள்ள உதவும் வகையில் எழுதப்படுகிறது. இக்குறிப்புகள் அனைத்தும் தொழில்நுட்ப பகுப்பாய்வின் அடிப்படையில் மட்டுமே தரப்படுகின்றது. சந்தையின் நகர்வுகளுக்கு வேறு பல காரணங்களும் உண்டு. இத்தகவல்களை கொண்டு வணிகம் செய்யும்முன் சந்தையில் உள்ள அபாயங்கள் பற்றி தெரிந்துக்கொள்வது அவசியம். வணிகத்தில் உங்கள் சுயமுடிவோடு ஈடுப்படவும். இதில் ஏற்படும் லாப/நட்டத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல.