Monday, November 30, 2009

தடைநிலை மற்றும் தாங்கு நிலை

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சம்பவம் நவம்பர் 2008 பருவமழை நல்ல மழையை பொழிந்ததை ஒட்டி விவசாயிகள் நெல் விதைத்து 2009 ஜனவரி மாதம் நெல் அறுவடை செய்கின்றார்கள். அனைத்து விவசாயிகளும் ஒரே நேரத்தில் அறுவடை செய்வதால் நெல் கொள்முதல் சந்தையில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்முட்டையின் விலை மிகக் குறைந்த விலை ரூ 500 க்கு விற்கப்படுகிறது.பிப்ரவரி மாதம் நெல்முட்டை வரத்து சற்று குறைந்தது.எனவே நெல் கொள்முதல்விலை சிறிது அதிகரித்து ரூ 600 க்கு விற்கப்படுகிறது மார்ச் மாதம் நெல்வரத்து மிகவும் குறைந்த்து. எனவே நெல் கொள்முதல் விலை ரூ 700 என்ற உச்சத்தை தொடுகிறது.

இதே போல் ஜனவரியில் நெல் விதைத்து ஏப்ரலில் நெல் அறுவடை நடக்கிறது,விளைவு ஏப்ரல் மாதம் நெல்கொள்முதல் நிலையங்களில் நெல்வரத்து மிக அதிகம் எனவே ரூ 700 ல் இருந்த கொள்முதல்விலை சில நாட்களிலே சரிந்து ரூ 500 ரை தொட்டது.பின்னர் மே மாதம் நெல்வரத்து சற்று குறைந்தது. எனவே விலை ரூ 600 தொட்டது. ஜுன் மாதம் நெல்வரத்து மிகவும் குறைந்தது எனவே நெல்கொள்முதல் விலை ரூ 700 தொட்டது.இதை கொண்டு ஒரு வரைபடம் கீழே வரையப்பட்டுள்ளது.



நெல்கொள்முதல் சந்தையில் நெல் வாங்கி அதை வெளிமாநிலத்திற்கு விற்கும் வியாபாரி மற்றும் அரிசியை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வும் மிகப்பெரிய முதலாளிகள் எங்கு வாங்குவார்கள், சந்தேகம் ஏன் கண்டிப்பாக ரூ 500ல் தான், எனவே நெல்விலை ரூ 500 க்கு அருகில் வரும் போது நெல்கொள்முதல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் மிக அதிக அளவில் பணம் சந்தைக்குள்வரும். அதாவது ரூ 500ல் ஒரு டிமாண்டு உருவாகும். எனவே நெல் கொள்முதல் விலை ரூ 500 ல் இருந்து தானாகவே ரூ 600 நோக்கி மேலே செல்லும். ஏப்ரல் மாதம் ரூ 700 ல் இருந்த கொள்முதல் விலை மேல் இருந்து கீழே இறங்கும் பொழுது ரூ500 ல் ஒரு தாங்குநிலை உருவாகின்றது. இதற்க்கு சப்போர்ட்(Support) எனப்படும்.

இதை போல் நெல்கொள்முதல் விலை ரூ 700 யை தொடும் பொழுது அடுத்த மாதம் விலை ரூ 500க்கு செல்லும் எனும் பயத்தில் அதிக அளவில் விற்க வருவார்கள் அங்கே ஒரு விலை ஏற்றத்தில் ஒரு தடைநிலை உருவாகும். இதற்க்கு ரெசிஸ்டென்ஸ்(Resistance) என்று பெயர்.

இது பங்குச்சந்தைக்கும் பொருந்தும். ஒரு குறிப்பிட்ட நிறுவனப்பங்கின்விலை ஒரு குறிப்பிட்ட விலையில் ஏதே ஒரு காரணத்திற்காக அதிகமானவர்கள் அதாவது, பரஸ்பரநிதி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலிட்டாளர்கள், இந்திய மிகப்பெரிய பணக்காரர்கள் வாங்குவார்கள் அந்த பங்கிற்கு ஒரு டிமாண்டு அதாவது பங்குவிலை வீழ்ச்சியின் ஒரு தாங்குநிலை உருவாகும். இதே போல் ஒரு குறிப்பிட்ட விலையில் அதிகமானவர்கள் விற்பார்கள் அது பங்கின் விலைஏற்றத்தில் ஒரு தடைநிலையை உருவாக்கும்.இது தான் பங்குச்சந்தையில் பயன்படுத்தப்படும் சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டென்ஸ் ஆகும்.

கிழே நிஃப்டி வரைபடம் உள்ளது. அதில் தடைநிலை மற்றும் தாங்குநிலை கொடுக்கப்பட்டுள்ளது.நன்கு கவனித்தால் நிஃப்டி தடைநிலை அருகே வரும் பொழுது துபாய் கடன் பத்தின செய்தி வந்து சந்தை கிழே இறங்கியது .


---------------

No comments:

Post a Comment

முன்குறிப்பு

இத்தளம் பங்குசந்தையை பற்றி அறிந்து கொள்ளவும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எப்படி இயங்குகிறது என்பதை புரிந்துகொள்ள உதவும் வகையில் எழுதப்படுகிறது. இக்குறிப்புகள் அனைத்தும் தொழில்நுட்ப பகுப்பாய்வின் அடிப்படையில் மட்டுமே தரப்படுகின்றது. சந்தையின் நகர்வுகளுக்கு வேறு பல காரணங்களும் உண்டு. இத்தகவல்களை கொண்டு வணிகம் செய்யும்முன் சந்தையில் உள்ள அபாயங்கள் பற்றி தெரிந்துக்கொள்வது அவசியம். வணிகத்தில் உங்கள் சுயமுடிவோடு ஈடுப்படவும். இதில் ஏற்படும் லாப/நட்டத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல.