பங்கு சந்தையை பற்றிய பொதுவான கருத்து சூதாட்டம். பணம்படைத்தவன் என்ன நினைக்கிறானோ அதுபடி சந்தை ஏறவும், இறங்கவும் செய்கிறது. ஒரு வகையில் இது சரியே. மேனுபுலேசன் இங்கு இருக்கத்தான் செய்கிறது. அது மட்டும் இன்றி பங்கு சந்தை மனதுடன் சம்பந்தப்பட்டது. எ.கா. ஒரு பங்கை 10ரூ க்கு வாங்கி அதை 12 ரூபாய்க்கு விற்றால் அது 16 ரூ வரை செல்லும். அடுத்த முறை 10ரூபாய்க்கு வாங்கி 16 வரை இலக்கு நிர்ணயித்து இருந்தோம் ஆனால் அது 12 வரை சென்று கீழே 6 ரூபாய்க்கு போகும் நாமும் பயந்து போய் 6 ரூபாய்க்கு விற்போம் விற்ற பிறகு அது 16 ரூபாய் வரை சென்று நம்மை பார்த்து சிரிக்கும். இங்கு ஆசை பயம் என இரண்டும் மனதுடன் சம்பந்தப்பட்டது. இது மட்டும் அல்ல ஒரே செய்திக்கு சந்தை இரண்டு விதமாக செயல்பாடும். எ.கா. வட்டி வீதம் குறைப்பு, இதற்கு ஒரு சமயம் இறங்கும். அதே வட்டி வீதம் குறைப்புக்கு சந்தை ஒரு சமயம் ஏறும். ஏன் என்று ஒன்றுமே புரியாது. அதே போல் பெட்ரோல் விலை அதிகரிப்பு என்பது ஒரு செய்தி. இதற்கு ஒரு நிறுவனத்தின் பங்கு ஏறும் அதே தொழில் உள்ள மற்றொரு நிறுவனத்தின் பங்கு இறங்கும் ஏன்? தெரியாது.
எல்லாம் மேனுபுலேசன் தான். பங்குசந்தையில் மேனுபுலேசன் இல்லை எனில் சந்தை இயங்காது. லாபமும் நட்டமும் இரண்டும் பார்க்க இயலாது. இந்த மேனுபுலேசனுக்கு என்று ஒரு சில கணக்கு இருக்கின்றது. அதாவது தொழில்நுட்பம். சும்மா ஒரு பணக்காரன் ஒரு பங்கை ஏற்ற நினைத்து அதை வாங்கினால் அதே பங்கை வேறு இரண்டு பணக்கார்கள் இறக்க நினைத்து,விற்று அந்த பணக்காரனை இவர்கள் ஏழை ஆக்கிவிட்டு சென்றுவிடுவார்கள். அதனால் தான் ஒரு சில தொழில்நுட்பங்கள் இந்த வர்த்தகத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது இதில் ஈடுபடும் ஒட்டுமொத்த வணிகர்களின் மனநிலையை புரிந்து கொள்ள உருவாக்கப்பட்டது தான் தொழில்நுட்ப்பகுப்பாகும். மேலே சொன்ன ஒரு செய்தி இருவித செயல்பாடுகளுக்கு தொழில்நுட்ப்பகுப்பாய்வே காரணம் ஆகும். தொழில்நுட்ப்பகுப்பாய்வை சரியாக பயன்படுத்தினால் சிறுவணிகர்கள் கூட லாபம் பார்க்க முடியும்.
No comments:
Post a Comment