Tuesday, December 22, 2009

ஓ இது தான் "அ" வா?

இந்த பதிவுதான் முதல் பதிவாக இருந்திருக்க வேண்டும். இதை ஞாபகப்படுத்திய திரு.தேவன் அவர்களுக்கு நன்றி. பங்குவணிகம் செய்ய ஒருவருக்கு என்ன என்ன தேவைகள்? முதலில் ஏதவாது ஒரு வங்கியின் சேமிப்பு கணக்கு மற்றும் வருமானவரித்துறையின் கீழ் வரும் பேன்கார்டு(PAN Card) அவசியம். முதலில் இதை வாங்கிக் கொள்ள வேண்டும். டிமேட்(Demat) கணக்கு திறக்க இது மிகவும் அவசியம். அடுத்த தேவைகள் தங்களின் வீட்டு முகவரிக்கான சான்று, இரண்டு புகைப்படம் பாஸ்போர்ட் அளவில் மற்றும் ரத்துசெய்த காசோலை ( Cancelled cheque). இவை அனைத்தும் தயார் எனில் பங்குதரகு நிறுவனத்தை அணுகலாம். உதாரணமாக
Sharekhan
Indiabulls Securities
Indiainfoline
Geojit
ICICI Direct
Reliance Money
Religare
and many others
அவர்கள் தரும் விண்ணப்பத்தை கவனமாக படித்து பூர்த்திசெய்து, மேலே குறிப்பிட்ட சான்றுகளுடன் அளித்தால் 10 நாட்களில் தங்களுக்கு டிமேட் கணக்கு (Demat Account) மற்றும் வர்த்தக கணக்கு (Trading Account) துவங்கி தருவார்கள்.

வங்கி கணக்கு, வர்த்தக கணக்கு, டிமேட் கணக்கு (Three in one Account) செயல்படும் விதம்:

வங்கி கணக்கு
இது சாதாரண வங்கி சேவை கணக்காகும். நீங்கள் இணையதளம் மூலம் நேரடி வணிகம் (Online Trading) செய்ய விரும்பினால், உங்கள் பங்கு வணிக தரகு நிறுவனம் அவர்கள் தொடர்பு வைத்துள்ள வங்கிக் கிளையில் உங்களுக்கு ஒரு சேவை கணக்கை பூஜ்ய முதலீட்டில் துவங்கி கொடுப்பார்கள். இதை உங்கள் வர்த்தக கணக்குடன் இணைத்து இருப்பார்கள். இந்த வங்கி சேமிப்பு கணக்கின் முலமாகதான் வர்த்தக கணக்கில் பணத்தை செலுத்த முடியும்.

வர்த்தக கணக்கு
இது பங்கு தரகு நிறுவனத்தில் தொடங்கப்படும் ஒரு கணக்கு ஆகும். இந்த கணக்கில் பணம் இருந்தால் தான் நீங்கள் பங்குகளை வாங்க முடியும்.அதைபோல் வாங்கிய பங்கை விற்றாலும் பணம் இந்த கணக்கில் தான் வரவு வைக்க படும். உங்களுக்கு பணம் தேவை எனில் இங்கு இருந்து தங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றி கொள்ளலாம்.

டிமேட் கணக்கு
இந்த கணக்கு உங்கள் பங்குதரகு நிறுவனம் தங்கள் பெயரில் NSDL-யில் (National Securities Depository Limited) துவங்கும். உங்கள் பணத்தை வங்கி கணக்கில் சேமித்து வைப்பது போன்று நீங்கள் வாங்கும் பங்குகள் இந்த டிமேட் கணக்கில் சேமிக்க படும். பொதுவாக நீங்கள் பங்கு வாங்கிய 3 வது தினம் உங்கள் கணக்கிற்கு வந்து சேறும்.

மேலும் எளிதாக புரிந்து கொள்ள கீழே உள்ள படத்தை பாருங்கள்.


(முன்பு பங்கு பத்திரங்களை வாங்கி வைத்திருப்பவர்கள் இப்பொழுது விற்க வேண்டுமானால் முதலில் டிமேட் கணக்கை துவங்கி பத்திரங்களை டிமேட்டாக (Dematerialise) மாற்ற வேண்டும்.)
--------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

முன்குறிப்பு

இத்தளம் பங்குசந்தையை பற்றி அறிந்து கொள்ளவும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எப்படி இயங்குகிறது என்பதை புரிந்துகொள்ள உதவும் வகையில் எழுதப்படுகிறது. இக்குறிப்புகள் அனைத்தும் தொழில்நுட்ப பகுப்பாய்வின் அடிப்படையில் மட்டுமே தரப்படுகின்றது. சந்தையின் நகர்வுகளுக்கு வேறு பல காரணங்களும் உண்டு. இத்தகவல்களை கொண்டு வணிகம் செய்யும்முன் சந்தையில் உள்ள அபாயங்கள் பற்றி தெரிந்துக்கொள்வது அவசியம். வணிகத்தில் உங்கள் சுயமுடிவோடு ஈடுப்படவும். இதில் ஏற்படும் லாப/நட்டத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல.