Monday, November 23, 2009

பங்குசந்தையில் தொழில்நுட்ப பகுப்பாய்வு

ஒரு நிறுவனப்பங்கின் கடந்த கால விலை ஏற்ற,இறக்கங்களை கொண்டு வரைபடம் வரைந்து,அதிலிருந்து எதிர்வரும் காலத்தில் அந்த பங்கின் விலை ஏற்ற இறக்கம் எவ்வாறு இருக்கலாம் என கணிக்கும் முறைக்கு தொழில்நுட்ப பகுப்பாய்வு எனப்படும்.

இங்கு பயன்படுத்தப்படும் வரைபடம் எப்படி இருக்குமென்றால் நாம் பள்ளி பாடத்தில் பயன்படுத்தும் வரைபடம் போன்றது.இந்த வரைபடத்தில் X அச்சில் கால அளவை குறிக்கும், Y அச்சு விலை அளவை குறிக்கும்.

குறிப்பாக மூன்று விதமான வரைபடங்கள் பங்குசந்தையில் பயன்படுத்தப்படுகின்றன.அவை

லைன் சார்ட்

லைன் சார்ட் அந்த நிமிட (அ) அன்றைய தினம் விலை முடிவை கொண்டு வரையப்படுகின்றது.

பார் சார்ட்
பார் சார்ட் -1(Bars)


பார் சார்ட் -2 (Bars W/open)


பார் சார்ட் அன்றைய தினத்தின் தொடக்க,முடிவு,அன்றையதினத்தின் அதிகபட்ச விலை மற்றும் குறைந்தபட்ச விலை உள்ளடக்கியது.

கேன்டில் ஸ்டிக் சார்ட்

கேன்டில் ஸ்டிக் சார்ட் மற்றும் பார் சார்ட் இடையே உள்ள வேறுபாடு படங்களை கண்டு நிங்களே அறிந்து கொள்ளுங்கள்.
கேன்டில் ஸ்டிக் சார்ட் என்பது 300 வருட பழமையான, ஜப்பானியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு முறையாகும்.இதை சமீப காலமாக, அதிகமான வர்த்தகர்கள் பயன்படுத்துகிறார்கள்.

இதே போன்று வரைபடத்தில் X- அச்சில் உள்ள கால அளவு தனிப்பட்ட வர்த்தகர்களின் தேவைக்கேற்ப மாறுபடுகிறது. குறிப்பாக தினசரி வர்த்தகத்திற்கு 1,5,15,30 நிமிட கால அளவை கொண்ட வரைபடங்களை பயன்படுத்தலாம்.கிழே 1 நிமிட வரைபடம் கொடுக்கப்பட்டுள்ளது.இது 17.11.2009 அன்று காலை 9.30 முதல் மாலை 3.30 வரையிலான 1 நிமிட நிப்டி வரைபடமாகும்.

குறுகிய கால மற்றும் நிண்ட கால முதலீட்டாளர்கள் தினசரி,ஒரு வாரம், ஒரு மாதம் காலஅளவை கொண்ட வரைபடம் பயன்படுத்தலாம்.
இத்தகைய வரைபடங்களை பங்குவணிகதரகு நிறுவனங்கள் அவர்களுடைய வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக தருகின்றன.

5 comments:

Karuthu Kandasamy said...

வணக்கம் ! சிறந்த எளிமையான பதிவு ! அடிக்கடி பதிவிடவும்.

Sridhar R said...

நன்றி திரு கருத்து கந்தசாமி.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

பொது வலைத் தளங்களில் ஏதாவது நுட்ப ஆய்வுக்கு உகந்த தளமாக இருக்கிறதா?

அறியத்தரவும்,நன்றி.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

சில பங்கு வணிக ஆனலைன் தளங்களில் ஆர்டரில் டெலிவரி,மார்ஜின் போக மூன்றாவதாக ATST என்ற ஒரு ஆப்ஷன் இருக்கிறதே அது என்ன? எவ்விதம அது ஆர்டரைப் பாதிக்கிறது?
AMO என்ற ட்ரேட் டைப் என்ன?

நன்றி.

Sridhar R said...

இதை பற்றி விரைவில் எழுதிகிறோம் அறிவன்.

Post a Comment

முன்குறிப்பு

இத்தளம் பங்குசந்தையை பற்றி அறிந்து கொள்ளவும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எப்படி இயங்குகிறது என்பதை புரிந்துகொள்ள உதவும் வகையில் எழுதப்படுகிறது. இக்குறிப்புகள் அனைத்தும் தொழில்நுட்ப பகுப்பாய்வின் அடிப்படையில் மட்டுமே தரப்படுகின்றது. சந்தையின் நகர்வுகளுக்கு வேறு பல காரணங்களும் உண்டு. இத்தகவல்களை கொண்டு வணிகம் செய்யும்முன் சந்தையில் உள்ள அபாயங்கள் பற்றி தெரிந்துக்கொள்வது அவசியம். வணிகத்தில் உங்கள் சுயமுடிவோடு ஈடுப்படவும். இதில் ஏற்படும் லாப/நட்டத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல.