பங்குசந்தைக்கு புதியதாக வருபவர்கள் மிக அதிகமாக கேட்கும் கேள்விகளில் ஒன்று தினசரி வணிகத்திற்கான பரிந்துரைகள்.
பங்குசந்தையை பற்றி புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம் அதிலும் மிகமிக கடினமான ஒன்று தினசரிவணிகம். ஆனால் ஏன் அதிகமான மக்கள் தினசரி வணிகத்தின் மீது அளவுக்கு அதிகமாக ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்?
மக்கள் எளிதாக தினமும் கையில் காசுபார்க்க ஆசைபடுகிறார்கள். அது 100 (அ) 50 ரூ யோ அதை பற்றி கவலைப்படுவதில்லை. தினசரி வணிகத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பதை கணிக்கும் ஆவல் அந்த கணிப்பு சரியா, தவறா என்ற முடிவு அன்றே தெரிந்து விடுகிறது. அவர்களுடைய கணிப்பு சரி என்றால் அதில் கிடைக்கும் பூரிப்பு அதிகம். தவறு என்றால் சோகம், கோபம் அதிகம். இன்றைய தோல்வி நாளைய வெற்றியாக மாற்றத்துடிக்கிறார்கள் அது மட்டுமல்ல கையில் ஒரு லட்சம் ரூபாயை வைத்து கொண்டு பல லட்சம் மதிப்புள்ள பங்குகளை வாங்க முடிகிறது, லாபம் வந்தால் மிக அதிகம் நட்டமும் மிக அதிகம். ஆனால் பாவம் சராசரி தினசரி வணிகரின் மனநிலை குறைந்த லாபத்தை உடனே உறுதிசெய்து விடுவான். ஆனால் குறைந்த நட்டத்தை ஏற்க மனமில்லாமல் காத்திருப்பான் அவன் கைகாசு கரையும் வரை.
அனைத்து நாட்களும் பங்குசந்தையில் நிச்சயதன்மை அற்ற நாட்களாகும். என்றோ ஒரு நாள் அவனை மிக அதிக கஷ்டத்தில் (நஷ்டத்தில்) ஆழ்த்தி விடுகிறது. பிறகு அவன் சந்தையை எட்டி கூட பார்ப்பதில்லை. நிதானமான பயணம் என்றும் வெற்றியை தரும்.
-------------------------------------------------------------------------------------------
Subscribe to:
Post Comments (Atom)
முன்குறிப்பு
இத்தளம் பங்குசந்தையை பற்றி அறிந்து கொள்ளவும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எப்படி இயங்குகிறது என்பதை புரிந்துகொள்ள உதவும் வகையில் எழுதப்படுகிறது. இக்குறிப்புகள் அனைத்தும் தொழில்நுட்ப பகுப்பாய்வின் அடிப்படையில் மட்டுமே தரப்படுகின்றது. சந்தையின் நகர்வுகளுக்கு வேறு பல காரணங்களும் உண்டு. இத்தகவல்களை கொண்டு வணிகம் செய்யும்முன் சந்தையில் உள்ள அபாயங்கள் பற்றி தெரிந்துக்கொள்வது அவசியம். வணிகத்தில் உங்கள் சுயமுடிவோடு ஈடுப்படவும். இதில் ஏற்படும் லாப/நட்டத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல.
No comments:
Post a Comment