பங்குசந்தையின் நகர்வுகள் பகுதியில் நாம் பார்த்த இறங்குமுகத்தில் ஒரு நிறுவனபங்கின் விலை இறங்குமுகத்தில் வரைபடம் எப்படி இருக்கும் எனில் முதல் தடைநிலையை விட இரண்டாவது தடைநிலை கிழே இருக்க வேண்டும். இரண்டாவது விட முன்றாவது கிழே இருக்கவேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட தடைநிலையை இணைக்கும் ஒரு சாய்கோடு வரைந்தால் அந்த சாய்கோட்டை எப்போழுது அந்த பங்கின்விலை உடைத்து மேல் ஏறுகின்றதோ அங்கே அந்த பங்கை வாங்கவேண்டும்.
இதை விளக்கும் படம் கிழே.
இதை போல் ஒரு பங்கியின் விலை ஏறுமுகம் எப்படி இருக்கும் எனில் முதல் தாங்குநிலையை விட இரண்டாவது தாங்குநிலை மேலே இருக்கும்.
முன்றாவது இரண்டாவதை விட மேலே இருக்கும்.
தாங்குநிலைகளை இணைக்கும் விதமாக ஒரு கோடு வரைய வேண்டும் அந்த கோட்டை என்று பங்கின் விலை உடைக்கின்றதோ அன்று அந்த பங்கை விற்க வேண்டும் வரைபடம் கிழே.
----------------------------------------------------------------------------------
2 comments:
இன்று தான் தங்களின் வலைப்பதிவைப் பார்த்தேன் மிகவும் நன்றாக உள்ளது. Technical Analysis பற்றி இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்
நன்றி
இளங்கோ
elango4468@gmail.com
வருகைக்கு நன்றி இளங்கோ.
Post a Comment