Thursday, February 25, 2010

பட்ஜெட் 2010

நாளை நிதி நிலைஅறிக்கை. 2008 உலக பொருளாதாரம் வீழ்ச்சியில் இருந்து சிறிது மீண்ட பிறகு தாக்கல் செய்யப்படுகின்றது. கடந்த 2009 வருடம் வீழ்ச்சியில் இருந்த சமயம் பல சலுகைகள் தொழில் துறைக்கு கிடைத்த்து. அதுபோல் இந்த வருடம் கண்டிப்பாக கிடைக்காது.

ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் அவரவர் துறைக்கு பல எதிர்பார்ப்புகள் இருக்கும். அனைத்தையும் கண்டிப்பாக நிதிநிலை அறிக்கை நிறைவு செய்யப்போவதில்லை.



சரி இந்த வருடம் என்னவெல்லாம் இருக்கலாம்.

1. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த சில முயற்சிகள் கண்டிப்பக இருக்கும்.

2. கிராம்புற கட்டுமான வளர்ச்சிக்கு சில திட்டங்கள் இருக்கலாம்.

3. மின்சார பற்றாக்குறை போக்க அணுசக்தி, தொழில் மற்றும் கட்டுமான சம்மந்தமான சில திட்டங்கள் இருக்கலாம்.

4. கல்வி சிர்திருத்தம், சில நிதி ஒதுக்கீடுகள் இருக்கலாம்.

5. எல்லா நிதிநிலை அறிக்கையிலும் இடம் பெறும் புகையிலை பொருட்களுக்கு குறிப்பிட்ட வரிஉயர்வு இருக்கும்.

6. உரத்தொழிற்சாலைகளுக்கு சில சலுகைகள் இடம் பெறலாம்.

மேலும் தொழில்துறைக்கு கொடுத்து வந்த நிதி ஒத்துழைப்பு முழுவதுமாக திரும்ப பெறப்படுகிறதா அல்லது பகுதி அளவா என்பது தெரியும்.

NTPC, REC பொதுப்பணித்துறை நிறுவனங்களின் FPO தோல்விகளுக்கு என்ன பதில் என்பது தெரியும். நிதிபற்றகுறை பற்றியும். இன்னும் சில அதிர்ச்சிகளும், சந்தோஷங்களும் இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் பங்குசந்தை எப்படி பார்க்கப்போகிறது என்பது தான் முக்கியம்.

தொழில்நுட்பத்தை வைத்து பார்க்கும்பொழுது துபாய்கடன் சம்பந்தமாக செய்திவந்த சமயம் சந்தை 4538 புள்ளிவரை சரிந்தது. அது உடைபடாமல் இருந்தால் மேல்.

சிறுவணிகர்கள் FNO தவிர்ப்பது நல்லது.

Wednesday, February 24, 2010

டிரெண்டு லைன்

ஒரு நிறுவனப்பங்கை எப்பொழுது வாங்க வேண்டும், எப்பொழுது விற்க வேண்டும்?

இந்த கேள்விக்கு பொதுவான பதில் மிக்ககுறைந்த விலையில் வாங்கி, மிக அதிக விலையில் விற்க வேண்டும். கேட்கும் பொழுது மிக எளிமையாக தெரியும். ஆனால் இதை கையாழுவது மிக கடினம்.



எது மிக குறைந்த விலை, எது மிக அதிக விலை என்பது யாருக்கும் தெரியாது. உதாரணத்திற்கு 100 ரூபாய்க்கு வர்த்தகமாகும் பங்கு X யை 80 ரூபாய்க்கு வந்தால் அது மிக குறைந்த விலை என்று வாங்கினால் அது மேலும் குறைந்து ரூ 60 க்கு செல்லும். இதே போல் X பங்கை ரூ100 க்கு விற்றால் அந்த பங்கு 120 ரூபாய்க்கு செல்லும். சரியாக மிக குறைந்த விலையில் வாங்கி மிக அதிக விலையில் விற்க ஏவராலும் முடியாது.

சரி நிலையற்ற இந்த பங்கு சந்தையில் ஒரு நிறுவன பங்கை வாங்க, விற்க எதை அளவுகோலாக எடுத்து கொள்வது, இதற்காக உறுவாக்கப்பட்டது தான் டிரெண்டு லைன் .

இது ஒரு மிக அற்புதமான தொழில்நுட்பமாகும். இதை பற்றி வரும் பதிவுகளில் காணலாம்.
-------------------------------------------------------------------------------------------------

Tuesday, February 23, 2010

இறங்குமுகம்

19.02.2010 பதிவில் நாம் குறிப்பிட்ட இறங்குமுகம் நகர்வுக்கு உதாரணம் கீழே.

Indiabulls Real Estate Ltd.


-------------------------------------------------------------------------------------

Saturday, February 20, 2010

ஏறுமுகம்

நேற்றைய பதிவில் நாம் குறிப்பிட்ட ஏறுமுகம் நகர்வுக்கு உதாரணம் கீழே.

Axis bank பங்கு ஏறுமுகத்தில் உள்ளது:



-----------------------------------------------------------------------

Friday, February 19, 2010

பங்குசந்தை நகர்வுகள்

பங்குசந்தையை பொருத்தவரையில் முன்று விதமான நிகழ்வுகளுக்கு இடம் உண்டு. அவை ஏறுமுகம், இறங்குமுகம் மற்றும் பக்கவாட்டில் நகர்வு. இந்த முன்று நிகழ்வுகளை சரியாக கணிக்க முடிந்தால் பிறகு என்ன நீங்கள் தான் ராஜா.

சரி எப்படி வரைபடத்தில் ஒரு பங்கை ஏறுமுகத்தில் உள்ளது என கண்டுபிடிப்பது? முதல் தடைநிலையை விட இரண்டாவது தடைநிலை மேலே இருக்க வேண்டும். இதே போல் முதல் தாங்குநிலையை விட இரண்டாவது தாங்கு நிலை மேலே இருக்க வேண்டும். இது ஏறுமுகமாகும். எளிதாக புரிந்து கொள்ள கீழே உள்ள படத்தை பாருங்கள்.


இதே போல் இறங்குமுகத்தில் முதல் தடைநிலையை விட இரண்டாவது தடைநிலை கீழே இருக்க வேண்டும். முதல் தாங்குநிலையை விட இரண்டாவது தாங்கு நிலை கீழே இருக்க வேண்டும். கீழே படம் தரப்பட்டுள்ளது.


பக்கவாட்டில் நகர்வு ஒரு நிறுவனப்பங்கின் முதல் தடைநிலை மற்றும் முதல் தாங்கு நிலைக்கு உட்பட்டு வர்த்தகம் நடைபெற வேண்டும். படம் கீழே தரப்பட்டுள்ளது.

இதை கணக்கிட காலஅளவு தனிப்பட்ட நபர் தேவைக்கேற்ப மாறுபடுகிறது.
----------------------------------------------------------------------------------

Thursday, February 18, 2010

பங்குசந்தையின் தாரகமந்திரம்

உலகின் மிகப்பெரிய பணக்காரர் வாரன் பஃபட் (Warren Buffett) . பங்குசந்தையின் பிதாமகன் தனது 11வது வயதில் சிடுடிஸ் சர்வீஸஸ் (Cities Services) என்ற நிறுவனத்தின் பங்கை 38 டாலர் என்ற விலையில் வாங்கினார்.



அவர் வாங்கிய சிறிது காலத்தில் அது 28 டாலர் என்ற விலைக்கு விழ்ச்சி அடைந்தது. அவர் மிகவும் கவலையுடன் காத்திருந்தார் அந்த பங்கு 40 டாலர் வந்த உடன் விற்றுவிட்டு மிகவும் மகிழ்ச்சியுடன் வெளியேறினார். ஆனால் அந்த பங்கு 200 டாலர் வரை சென்றது அப்பொழுது தான் அவர் செய்த தவறு அவருக்கு புரிந்தது அதிலிருந்து ஒரு பாடம் கற்றார்.

முதலீடு செய்து மிகவும் பொறுமையாக காத்திருக்க ஆரம்பித்தார். இந்த அனுபவம் அவருக்கு மட்டுமல்ல எங்களுக்கும் ஏன் பங்குசந்தையில் ஈடுபடும் அனைவருக்கும் பொருந்தும். பொருமையும், காத்திருத்தலும் பங்குசந்தையின் மிக முக்கியமான தாரக மந்திரம்.

Wednesday, February 10, 2010

வர்த்தக ஆலோசனை-10-02-2010

பங்கு பரிந்துரை பெயர் - Chambal Fertilisers & Chemicals Ltd(NSE)

கால அளவு - 6 மாதம்

வாங்க வேண்டிய விலை - ரூ 71.50

இலக்கு விலை - ரூ 80 மற்றும் 86

வரும் 2010 நிதிநிலை அறிக்கையில் உரத்தொழிற்சாலைகளுக்கு சில சலுகைகள் கிடைக்க கூடும் என்பதால் இந்த பங்கை பரிந்துரை செய்கிறோம்.

நீங்கள் பங்குசந்தைக்கு ஒதுக்கிய பணத்தில் 5% மட்டும் இந்த பங்கை வாங்க வேண்டும்.

முன்குறிப்பு

இத்தளம் பங்குசந்தையை பற்றி அறிந்து கொள்ளவும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எப்படி இயங்குகிறது என்பதை புரிந்துகொள்ள உதவும் வகையில் எழுதப்படுகிறது. இக்குறிப்புகள் அனைத்தும் தொழில்நுட்ப பகுப்பாய்வின் அடிப்படையில் மட்டுமே தரப்படுகின்றது. சந்தையின் நகர்வுகளுக்கு வேறு பல காரணங்களும் உண்டு. இத்தகவல்களை கொண்டு வணிகம் செய்யும்முன் சந்தையில் உள்ள அபாயங்கள் பற்றி தெரிந்துக்கொள்வது அவசியம். வணிகத்தில் உங்கள் சுயமுடிவோடு ஈடுப்படவும். இதில் ஏற்படும் லாப/நட்டத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல.